Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் பெ‌ற இ‌ன்று முத‌ல் க‌‌ட்டண‌‌ம் உய‌ர்வு!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (09:35 IST)
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு இன்று முதல் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அத‌ன்படி இரு‌ச‌க்கர வாகன ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌‌ம் ரூ.250‌ல் இரு‌ந்து ரூ.350 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இதுவரை பழகுனர் உரிமம் பெறுவதற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கு சேவை வரி தற்போது கூடுதலாக ரூ.30 விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பழகுனர் உரிமம் பெறுவோர் இனி ரூ.60 செலுத்த வேண்டும். இதுபோல், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் போன்ற போக்குவரத்து அல்லாத (நான்-டிரான்ஸ்போர்ட்) உரிமங்களுக்கு விண்ணப்பிப்போர், நடைமுறையில் இருந்து வரும் ரூ.250 கட்டணத்துடன் ரூ.100-ஐ சேவை வரியாக சேர்த்து ரூ.350-ஆக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதுபோல், போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.250-டன் கூடுதலாக சேவைவரி ரூ.50 செலுத்த வேண்டும். வாகனங்களுக்கான சர்வதேச ஓட்டுனர் உரிமத்துக்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளத ு.
இதுபோல் மேலும் சில நடைமுறைகளுக்கு தற்போதுள்ள கட்டணமும், அடைப்புக்குறிக்குள் உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் புதிய கட்டண விவரமும் தரப்பட்டுள்ளது.

வாகனப்பதிவ ு, மறுபதிவுகள்: இருசக்கர வாகனங்கள்-ரூ.60 (கூடுதலாக ரூ.100), மூன்று சக்கர வாகனங்கள்-ரூ.200 (ரூ.100), மூன்று சக்கரங்களுக்கு மேற்பட்ட பல்வேறு வாகனங்களுக்கு தற்போது முறையே ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனிமேல், அத்தொகையுடன் கூடுதலாக ரூ.200 செலுத்த வேண்டும். வாகனத் தற்காலிகப் பதிவு-ரூ.40 (கூடுதலாக ரூ.100). போக்குவரத்து வாகனங்களுக்கு 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும் புதிதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுக்கு தற்போது ரூ.300 முதல் ரூ.420 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி, கூடுதலாக ரூ.50 சேவை வரி செலுத்த வேண்டும். தடையில்லா சான்றிதழ் வாங்க இதுவரை ரூ.2-க்கான `கோர்ட்டுபீ ஸ்டாம்ப்' செலுத்தினால் போதும் என்று இருந்தது. அதற்கு தற்போது ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எப்.சி-க்கு வழக்கமான ரூ.300-டன் ரூ.25 சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments