Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் செ‌ல்பே‌சி‌க்கு தடை: சென்னை பல்கலை. பரிசீலனை!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (12:04 IST)
'' கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்பே‌சி பேசுவத‌ற்கு தடை விதிப்பது குறித்து சென்னை பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருகிறது'' என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூ‌றினா‌ர்.

வகு‌ப்புக‌ளி‌ல் மாணவ-மாணவிகள் செ‌ல்பே‌சிகளை ப‌ய‌ன்படு‌த்துவதா‌ல் அவர்களின் கல்வி கற்கும் நேரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக‌ம் மாணவ-மாணவிகள் செல்பே‌சி ப‌ய‌ன்படு‌த்த தடை ‌வி‌‌தி‌த்தது. சமீபத்தில் பள்ளிக்கூடங்களு‌க்கு மாணவ- மாணவிகள் செல்பே‌‌சிக‌ள் கொ‌ண்டு த‌மிழக அரசு தடை ‌வி‌தி‌த்தது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் உள்பட மொத்தம் 170 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

இவர்களின் கல்வி நலன் கருதி கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செ‌ல்பேச‌ி பேச தடை விதிக்கப்படுமா? என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கே‌ட்டதற‌்கு, பள்ளி மாணவர்களுக்கு செல்பே‌சி தடை அவசியம் தான். சென்னை பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழக அங்கீகாரம் கொண்ட கல்லூரிகளிலும் செல்போன்களில் மாணவ-மாணவிகள் பேசுவதற்கு தடை விதிப்பது பரிசீலனையில் உள்ளது. இது குறித்து விரைவில் நடைபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

Show comments