Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷ‌ன் ‌அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசாரணை‌க்கு த‌‌மிழக அரசு ப‌ரி‌ந்துரை!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (17:42 IST)
புது‌ச்சே‌ர ி ர‌‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ பிடிப‌ட் ட 2 ஆ‌யிர‌‌ம ் ட‌ன ் ரேஷ‌ன ் அ‌ரி‌ச ி ‌ பிடிப‌ட்டத ு கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த் த ம‌த்‌‌தி ய புலனா‌ய்வ ு கழக‌த்‌தி‌ற்க ு (‌ ச ி.‌ ப ி.ஜ.) த‌மிழ க அரச ு ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

புதுச்சேரி ரயில் நிலையத்தில ி‌ ல ் இரு‌ந்த ு அ‌க்டோப‌ர ் 27 ஆ‌ம ் தே‌த ி 2 ஆயிரம் மெட்ரிக் டன் ரேஷ‌ன ் அரிசியை கட‌த்த முய‌ன்றபோது புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினால் கைப்பற்றப்பட்டது. இது குறித்த வழக்கு புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், இவ்வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், வழக்கின் தீவிர தன்மையினை கருத்தில் கொண்டும், மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுமென்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும், தமிழக குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள், புதுச்சேரி அலுவலர்களை நேரில் சந்தித்து, இவ்வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி காவல் துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும், இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு, இவ்வழக்கு பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் இவ்வழக்கின் தீவிர தன்மையை எடுத்துரைத்து, மத்திய புலனாய்வுத் துறை தலைவர் விஜய்சங்கருக்கு, வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனக்கோரி அ‌க்டோப‌ர் 23ஆ‌ம் தே‌தி விரிவான அறிக்கை தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வழக்கு சம்பந்தமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணை பற்றியும் மத்திய புலனாய்வுத் துறையிடம் இவ்வழக்கை விரைவாக ஒப்படைக்க புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்வது என்றும், இதுசம்பந்தமாக தமிழகம் தொடர்புடைய விசாரணையை விரைவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments