Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய அமைச்சருக்கு பதிலளிக்க முதலமைச்சர் மறுப்பு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (20:52 IST)
மலேசியத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தான் எழுதிய கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்து மலேசிய அமைச்சர் ஒருவர் கூறிய கருத்துகளுக்கு பதிலளிக்க முதலமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதியிடம், மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜ்ஜீஸ் கூறிய கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மலேசியாவில் தமிழர்களுக்கு நேர்ந்த துயரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அம்மக்களின் சார்பாக நான் கடிதம் எழுதினேன். இதற்காக மலேசிய அமைச்சர் கூறிய கருத்திற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை" என்று கருணாநிதி கூறினார்.

தமிழக முதலமைச்சரான கருணாநிதி, தனது மாநிலத்தைப் பார்த்துக் கொண்டால் போதும் என்று நஸ்ரி அஜ்ஜீஸ் கூறியதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதற்கு, அங்கு வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்குத்தான் தான் கடிதம் எழுதியதாகவும், மலேசிய அரசிற்கு எதிராக எந்த கருத்தையும் தான் கூறிவில்லை என்றும் கருணாநிதி பதிலளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments