Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் பெய‌ர் சே‌ர்‌க்க டிச‌ம்ப‌ர் 8 கடைச‌ி: நா‌ள் நரேஷ் குப்தா!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (10:30 IST)
'' புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடை‌சி நா‌ள் டிச‌‌ம்ப‌ர் 8ஆ‌ம் தே‌தி'' எ‌ன்று த‌மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில ், ராயபுரம், தாம்பரம், ஆலந்தூர் சட்டசபை தொகுதிகளைத் தவிர மற்ற சட்டசபைகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 3 ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் பதிவு செய்யும் வசதிக்கு பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு உள்ளது. இதுவரை பெயர் சேர்ப்பதற்காக ஆயிரத்து 564 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 331 விண்ணப்பங்களும், காஞ ்‌சிப ுரம் மாவட்டத்தில் 241, திருவள்ளூர் மாவட்டத்தில் 154 விண்ணப்பங்களும் வந்துள்ளன. தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளுக்கு இந்த வசதி இனிமேல் செய்யப்படும்.

‌‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவரி வைத்துள்ளவர்கள் http://www.ceotamilnadu.nic.in, http://www.elections.tn.nic.in, http://www.tn.gov.in/election s ஆகிய ‌ மி‌ன்ன‌ஞ்ச‌‌ல் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்னதாக அதில் உள்ள விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.

பெயர் சேர்ப்பத ு, ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு கடைசி தேதி அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 13 தொகுதிகள் (ராயபுரம் தவிர), வில்லிவாக்கம், திருவொற்ற ிய ூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 11 ஆ‌ம் தேதிக்கு உள்ளாகவும், ராயபுரம், தாம்பரம், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் வசிப்பவர்கள் டிசம்பர் 18 ஆ‌ம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற அனைத்து தொகுதிக்கும் பெயர் சேர்ப்ப ு, ஆட்சேபனை தெரிவிப்பதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 8 ஆ‌ம் தே‌தி எ‌ன்று த‌மிழக தலைமை தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி நரே‌‌ஷ்கு‌ப்தா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments