Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திகை தீப‌‌ம் : ‌திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2007 (14:10 IST)
கார்த்திகை தீப நாளான நேற்று திருவண்ணாமலையில் நே‌ற்று மாலை 6 ம‌ணி‌க்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை 15 லட்சம் பக்தர்கள் வழிபட்டனர்.

ப‌க்த‌ர்க‌ளி‌ன் வச‌தி‌க்காக ‌சிற‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தன. மலையை‌ச் சு‌ற்‌றி வெறு‌ம் ம‌க்க‌ள் கூ‌ட்டமாக‌க் காண‌ப்ப‌ட்டது.

இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 21-ந் தேதி நடந்தது.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றுதலும், மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுதலும் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு 5 அகல்விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினார்கள்.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகளை சன்னதியில் இருந்து வெளியே கொண்டு வந்து மண்டபத்தில் வைத்தனர். 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரம் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் தயாராக நெய் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திலும், வெளியேயும் கூடியிருந்த பக்தர்கள், "அண்ணாமலைக்கு அரோகரா'' என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

அப்போது கோவிலுக்கு வெளியே நின்ற பக்தர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அ‌ண்ணாமலையானை வணங்கினார்கள்.

மலை உச்சியில் தீப ஜோதி எரிந்தவுடன் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், கடைகளில் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்கினார்கள்.

இந்த தீப விழாவுக்கு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேரு‌ந்துக‌ள் விடப்பட்டு இருந்தன.

இந்த விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு தீபத்தை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து தீப தரிசன மண்டபம் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

விழாவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவ‌ல்துறை‌யி னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மகாதீப திருவிழாவை தொடர்ந்து இன்று முதல் 3 நாட்கள் இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments