Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாற்றின் குறுக்கே அணை: 29ஆ‌ம் தேதி ரெயில் மறியல் - அனைத்து கட்சி தீர்மானம்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (09:29 IST)
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை கண்டித்து நவ‌ம்ப‌ர் 29ஆ‌ம் வாணியம்பாடியில் ரயில் மறியல் போராட்டம் நட‌த்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கம ்ய ூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்ட‌த்‌தி‌ல் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, கம ்ய ூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஆந்திர அரசு கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் நவ‌ம்ப‌ர் 29ஆ‌ம் தே‌தி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாணியம்பாடி நகரின் அனைத்து கட்சி சார்பில் முழுகடை அடைப்பு, வேலை நிறுத்த போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

வாணியம்பாடி நகரில் பாலாற்றில் லாரிகள் மூலம் அ‌ள்ள‌ப்படு‌ம் மண‌ல் நம் மாவட்டத்திலேயே விற்பனை செய்திடவும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்து செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்வது பல்லாயிரக்கணக்கான ஏழை, கூலி தொழிலாளர்களின் வாழ்வு ஆதார பிரச்சினை என்பதால் இதன் மீது உள்ள தடையை அரசு நீக்க வேண்டும் இ‌வ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments