Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த மார்க்கு‌க்காக வங்கி கல்வி கடன்தர மறுத்தது தவறு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (09:59 IST)
குறைந்த மார்க் எடுத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக பொ‌‌றி‌யிய‌ல் கல்லூரி மாணவருக்கு, வங்கி கல்வி கடன் தர மறுத்தது தவறு என்று, சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இனியன் கவுதமன் பிளஸ்-2 பொது‌த் தே‌ர்‌வி‌ல் 1,200- க்கு 614 மார்க் எடு‌த்தா‌ர். ரசாயன பாடத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் ஜூ‌ன் மாதம் நடந்த சிறப்பு தேர்வில் ரசாயன பாட‌த்தை எழு‌‌தி வெற்றி பெற்றார். ‌ பி‌ன்ன‌ர் தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூர ி‌யி‌ல் சே‌ர்‌ந்து படி‌த்தா‌ர்.

ஆண்டுக்கு கல்வி கட்டணம், பேரு‌ந்து கட்டணம், மதிய உணவு, புத்தகங்கள் ஆகியவற்றிற்கு ரூ.73 ஆயிரத்து 500 வீதம் 4 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும் என்று அக்கல்லூரி விவரத்தை வழங்கியது. ஆனா‌ல் மாணவ‌ன் இ‌னிய‌ன் கவுதமனா‌ல் அ‌ந்த பணத்தை திரட்ட முடியவில்லை. இதையடு‌த்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தார் மாணவ‌ர் கவுதம‌ன ். போதுமான மார்க் இல்லை என்று கூறி அவருக்கு கடன் தர அந்த வங்கி மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மாணவர் சென்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்தார். இ‌ந்த வழ‌க்கை நீதிபதி பி.ஜோதிமணி ‌ வ ிசாரித்தார். ‌ பி‌ன்ன‌ர் ‌நீ‌திப‌தி அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், மாணவர் பிளஸ்-2 பாடத்தில் குறைந்த மார்க் எடுத்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, தகுதி அற்றவர் என்று முடிவெடுக்க முடியாது. போதிய தகுதி இருந்ததால் தான் அவருக்கு பொ‌றி‌யிய‌ல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

வங்கி விதிமுறையில் திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வங்கி கடன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதியை மட்டுமே பார்க்க வேண்டும். ஆகவே, கடன் வழங்க மறுத்த உத்தரவை ‌ இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌ம் ரத்து செய்கிறது. கடன் கேட்டு மாணவர் விண்ணப்பித்த மனுவை 4 வாரத்தில் வங்கி பரிசீலித்து கல்வி கடன் வழங்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌பி.ஜோ‌திம‌ணி த‌ீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments