Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் சட்டம், ஒழுங்கு மோசம்: விஜயகாந்த்!

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2007 (12:44 IST)
தமிழகத்தில் சட்டம ், ஒழுங்கு மோசமாக உ‌ள்ளது என்று தே‌சிய மு‌ற்போ‌க்கு ‌திரா‌வி‌ட கழக‌த் தலைவ‌ர் விஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

‌ தி.மு.க. அரசு உருப்படியாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. 2 ரூபாய்க்கு அரிசி என்று சொல்லி அவர்களது கட்சிக்காரர்கள் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழி செய்ததும், இலவச கலர் டி.வி. என்ற பெயரில் கட்சிக்காரர்கள் அரசு தரும் தொலை‌க்கா‌ட்‌சிகளை விற்று சம்பாதிக்க வழி வகுத்ததும்தான் இந்த அரசின் சாதனை.

இதே போல இலவச கியாஸ் அடுப்பு இன்னொரு மோசடி திட்டம். பாவம் ஏழைகள். மண்எண ்ணெ‌ய் வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப் போது கியாஸ் சிலிண்டர் வாங்க ரூ.300க்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். எதையுமே உருப்படியாக செய்வதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. தெளிவு இல்லாத, குறிக்கோள் இல்லாத ஆட்சி ஒன்று இருக்குமானால் அது இந்த ஆட்சிதான்.

இந்த ஆட்சியில் சட்டம ், ஒழுங்கு சீர்குலைந்து விட்டத ு. இதற்கு வேண்டுமானால் இந்த ஆட்சிக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுத்தே தீர வேண்டும். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குகிறார்கள். அவர்களது கட்சி மாவட்ட செயலாளர் வெட்டிச் சாய்க்கப்படுகிறார். இதுதான் இந்த ஆட்சியின் சாதனைகள் எ‌ன்று ‌வ ிஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments