Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேசன் தனித்தேர்வு முடிவு 19ஆ‌ம் தேதி வெளியீடு!

Webdunia
சனி, 17 நவம்பர் 2007 (17:38 IST)
அக்டோபர் மாதம் நடைபெற்ற 10‌‌ ம் வகு‌ப்ப ு, மெட்ரிகுலேன், ஆங்கிலோ- இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆ‌கிய த‌னி‌த ்தேர்வு முடிவு வரு‌ம் 19ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது எ‌ன்று அரசு தே‌ர்வு இய‌‌‌க்குன‌ர் வச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தனித்தேர்வர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 10‌ ம் வகு‌ப்ப ு, மெட்ரிகுலேசன், ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் ஆகிய தேர்வுகளின் முடிவு 19 ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது. அதாவது 19 ஆ‌ம் தேதி முதல் 21‌ ஆ‌ம் தேதி வரை தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து அரசு தேர்வு மண்டல துணைஇயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து முதன்மை கல்விஅதிகாரி அலுவலகங்களிலும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை அந்தந்த மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க 23 ஆ‌ம் தேதி கடைசி நாள். இரு தாள்கள் கொண்ட மொழிப்பாடம ், ஆங்கிலப்பாடத்திற்கு ரூ.305, ஒரு தாள் கொண்ட பிற பாடங்களுக்கு ரூ.205. இந்த கட்டணத்தை அரசு தேர்வு இயக்குனரகம், சென்னை-6 என்ற பெயரில் வரவோலை ( டிமாண்ட் டிராப்ட ்) எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும் எ‌ன்று அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments