Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌குரு பெயர்ச்சி : குருஸ்தலத்தில் ஆ‌யிர‌க்கண‌க்கான பக்தர்கள் தரிசனம்!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (14:31 IST)
webdunia photoWD
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றானதும், குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில் இ‌ன்று நட‌ந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கல‌ந்து கொ‌ண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர்.

அதிகாலையில் ஆபத்சகாயேஸ்வரர ், எல்லாரீகுழலம்ம ை, குருபகவான ், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சுவாம ி, அம்பாள ், வள்ள ி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சன்னதிகளில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அளிக்கப்பட்டது. இ‌தி‌ல் கலந்து கொள்வதற்காக நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டனர ்.

ப‌க்த‌ர்க‌ள் ‌சிரம‌மி‌ன்‌றி செ‌ன்று வர கும்பகோணம ், மன்னார்குட ி, தஞ்ச ை, திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு அரசு பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோவன ், உதவி ஆணையர் பழனியப்பன ், அறங்காவலர் குழு தலைவர் அன்பரசன ், நிர்வாக அதிகாரி பொன் நந்தகோபால ், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

ஆல‌ங்குடி ஆப‌த்சகாயேசுவர‌ர் கோவிலில் 22ஆ‌ம் தே‌தி 2-வது லட்சார்ச்சனையும ், பரிவாரங்களும் செய்யப்படுகிறது.

தஞ்சாவூ‌ரி‌ல் இருந்து 10 க ி.‌ மீ. தொலைவில் உள்ள திட்டை கிராமத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற வசிஷ்டேசுவரர் கோவில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திட்டையில் சுவாமிக்கும ், அம்பாளுக்கும் இடையே குருபகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள் பாலித்து வரும் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் கிடையாத ு.

இக்கோவிலில் இன்று அதிகாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு ஹோமங்கள் தொடங்கி நாள் முழுவதும் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொட்டும் பனியிலும் பூஜையில் பங்கேற்றனர். இதற்காக பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமரத்தினம ், நிர்வாக அலுவலர் கோவிந்தராஜீ ஆகியோர் செய்து இருந்தனர்.

குருப் பெயர்ச்சிப் பல‌ன்க‌ள்!


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments