Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகளை ஆத‌ரி‌க்கும் கட‌்‌சிகளு‌க்கு தடை: காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டத்தில் தீர்மானம்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (10:24 IST)
'' விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து அமைப்புகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவற்றை தடை செய்ய வேண்டும ்'' என்று காங்கிரஸ் ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர ்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தா‌க்க‌ப்ப‌ட்ட சம்பவம் குறித ்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. அ‌ப்போது, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மய ூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டார். இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கினார்.

இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் நட‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் :

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது த‌ா‌க்குத‌ல் நட‌த்த காரணமாக இருந்தவர்களையும், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள ை கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப ்பு கொடுக்காமலும், கவனக்குறைவாகவும் இருந்த அப்பகுதியின் சட்டம ், ஒழுங்குக்கு பொறுப்பாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய சில அரசியல் கட்சிகளும ், சில அமைப்புகளும் இரங்கல் கூட்டம் என்ற போர்வையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி வருவது குறித்து தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி மிகவும் கவலை கொண்டுள்ளது.

எங்கள் இனிய தலைவர் ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணில் கொன்று சாய்த்த மாபாவத்தை செய்த விடுதலைப்புலிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது. மறக்காது. விடுதலைப்புலிகள் விஷயத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவில்லையென்றால் அதன் விளைவுகளுக்கு தமிழகம் வருந்த வேண்டியதிருக்கும்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து இயக்கங்கள் நடத்துகின்ற அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து அமைப்புகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவைகளை தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மய ூரா ஜெயக்கும ா‌ர் ‌மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments