Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

-ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (11:52 IST)
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் அணையும் அதன் முழு கொள்ளவை எட்டியது. அணையில் இருந்து பவானி ஆற்றில் ஐந்து ஆயிரம் கன அடி வீதமும், எல்.பி.பி., வாய்க்காலில் இரண்டாயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பவானி ஆற்றிலும், காவிரி ஆற்றிலும் வரும் தண்ணீர் பவானி கூடுதுறையில் சங்கமித்து ஈரோடு வழியாக செல்கிறது. காவிரி ஆற்றில் நேற்று காலை அதிகளவில் தண்ணீர் வந்தது. மதியத்துக்கு பின் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

பவானிசாகர் அணையில் நேற்று மதியம் 12 மணியில் இருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதே காரணம். பவானிசாகர் அணைக்கு 2,300 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வரும் 36 ஆயிரம் கன அடி நீர்மட்டுமே ஆற்றில் செல்கின்றன. கருங்கல்பாளையம் காவிரிக்கரைப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

வழக்கமாக காவிரி ஆற்றில் நீர் வந்தால் இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் மூழ்கி விடுகிறது. சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எனவே, அதிகாரிகள் நேரில் சென்று, பொதுமக்களை எ‌ச்ச‌ரி‌க்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments