Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமுகை வனப்பகுதியில் புலிதோல் வைத்திருந்தவர் கைது

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (11:49 IST)
சிறுமுகை வனப்பகுதியில் புலிதோல் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்ட ா‌ ர ்.

webdunia photoWD
ஈரோடு வனக்கோட்டத்தை சேர்ந்த பவானிசாகர் வனத்துறை ரேஞ்சர் மோகன் மற்றும் சிறுமுகை வனசரக ரேஞ்சர் செல்வய்யா விஜயகுமார் ஆகியோருக்கு சிறுமுகை மற்றும் பவானிசாகர் வனச்சரக எல்லையில் புலித்தோல் கடத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி இரண்டு ரேஞ்சர் க‌ ள் தலைமையிலான வனக்குழுவினர் சிறுமுகை மற்றும் பவானிசாகர் சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமுகை வனப்பகுதி குமரன்சாலை என்ற இடத்தில் வசித்து வரும் குமரன் என்பவர் புலித்தோல் ஒன்றை விற்பனைக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது தன் மாடுகளை அழித்த புலியை விஷம் வைத்து கொன்றதாக கூறினார். இவரிடம் சுமார் 1 மீட்டர் அகலமும் 2மீட்டர் நீளம் உள்ள ஒரு புலித்தோல் கைபற்றப்பட்டது.

இவரை வனத்துறைனர் கைது செய்து சிறுமுகை வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தோலுக்குறிய புலிக்கு சுமார் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments