Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணசாமியை முதல்வர் பார்த்தார்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (11:32 IST)
தமிழக முதவ்வர் கருணாநிதி, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

பரமக்குடி அருகே தாக்கப்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த முதல்வர் கருணாநிதி, ரயில் நிலையத்தில் இருந்து நேராக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் கிரிஷ்ணசாமியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததார்.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆற்காடு விராச்சாமி, துரைமுருகன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.

கிருஷ்ணசாமிக்கு சிகிச்சை அளித்து வரும் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், நேற்று இரவு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

Show comments