Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அ‌‌ணி 3 நா‌ளி‌ல் காணாம‌ல் போ‌ய்‌விடு‌ம் : இளங்கோவன்!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (12:28 IST)
3- வது அணி என்பது அவ்வப்போது திடீர் என்று பேசப்படும் ஒன்றாகும். 3-வது அணி உருவாகி 3-வது நாளில் காணாமல் போய்விடும். இப்போதுள்ள 3-வது அணியில் ஜெயலலிதா இருக்கிறாரா? இல்லையா? என்று சந்திரபாபு நாயுடுவுக்கே சந்தேகம் வந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கம ்ய ூனிஸ்டு கட்சியினர் 3-வது அணியின் கதவை தட்டியுள்ளனர். 3-வது அணியை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் எ‌ன்று இள‌‌ங்கோவ‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராமரைப்பற்றி தி.மு.க. தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகளில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் எப்போதும் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும். சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதனால் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும், வணிக வளர்ச்சியும் ஏற்படும். அந்த திட்டத்துக்கு தடைகள் ஏற்படுத்துவது போல் சில தலைவர்கள் பேசி வருவது வருத்தத்தை தருகிறது எ‌ன்று‌ம் இள‌ங்கோவ‌ன் கூ‌றினா‌ர்.

1000- ம் பேருக்கு ராமர் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் ராமரை கடவுளாக நினைத்து வருகிறார்கள். இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ராமர் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம் என ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

தமிழக அரசியலில் அ.தி.மு.க. இனி தலைதூக்க முடியாது. தமிழ்நாட்டில் முடிந்துபோன இயக்கங்களில் அ.தி.மு.க.வும் ஒன்று. எனவே எந்த நிலையிலும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை எ‌ன்று உறு‌தியாக கூ‌றின‌ா‌ர் ம‌‌த்‌திய அமை‌ச்ச‌ர் இள‌ங்கோவ‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments