Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் 3 நா‌ள் மழை பெ‌ய்யு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (13:16 IST)
புயல் சின்னம் காரணமாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தமிழக‌த்‌திலு‌ம், புதுவையிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளது.

வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது.

புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், சேலம், மதுரை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை பெ‌ய்தது.

புயல் சின்னம் காரணமாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் புதுவையிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடல் சீற்றம் இருக்கும், பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மைய‌ம் தெரிவித்து உள்ளது.

தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், கடலூர், சேலம், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை, பெரியாறு, வைகை அணை, மற்றும் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அவை வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங் கும் வீராணம் ஏரியும் நிரம்புகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் மிக பலத்த மழையும், காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments