Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா பாதுகா‌ப்பு ‌விவகார‌ம் : அரசு‌க்கு வைகோ க‌ண்டன‌ம்!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (18:54 IST)
மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் ம‌ர் ம நப‌ர் நுழை‌ந்த ‌‌விவகார‌த்‌தி‌ல ், பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் மெ‌த்தனமாக‌ச் செய‌‌ல்ப‌ட்ட த‌மிழக அரசு‌க்‌கு வைக ோ க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்துள்ளா‌ர ்!

ம.தி.மு.க. பொதுச ் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை‌யி‌ன் ‌விவர‌ம் வருமாற ு :

முன்னாள் முதலமைச்சரான அ. இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டி‌ற்கு‌ள் தீய நோக்கத்தோடு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டின் மேல்மாடி நூலகம் வரையிலும் செ‌ன்ற ‌நிக‌ழ்வு பெரும் அதிர்ச்சியை அ‌ளி‌‌க்‌கின்றது. ஜெயலலிதாவுக்கு அந்த நபரா‌ல் ஆபத்து ஏ‌ற்ப‌ட்டிரு‌க்க‌க்கூ‌டு‌ம் என்று நினைக்கும் போதே பதட்டமும், கவலையும் ஏ‌ற்படு‌கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை‌க் குறை‌த்தது. காவலர்களையு‌ம் பெருமளவில் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. த‌ற்போது ஒப்புக்குப் பெயரளவில் சில காவலர்கள் ப‌ணி‌யி‌ல் இருக்கிறார்கள்.

இந்நிலையில ், மர்ம நபர ் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதித்தது திட்டமிட்ட ஏற்பாடுதானோ என்ற ச‌ந்தேக‌‌த்தை ஊட்டுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் உரிய பாதுகாப்பினை காவல்துறை தருவதில்லை. காவல்துறை ஆளும் கட்சியின் எடுபிடியாக மாறிவிட்டதால்தான் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டது.

தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் கண்டனம் தெரிவிப்பதோட ு, ஜெயல‌லிதாவு‌க்கு‌த் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பது அரசின் கடமை என்று வலியுறுத்துகிறேன ்'' எ‌ன்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments