Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்த முயன்ற 180 மூட்டை அரிசி பறிமுதல்

-எமது ஈரோடு செய்தியாளர்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (16:55 IST)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 180 ம ூட ்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர ், உதவியாளரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக சங்ககிரி காவல்துறையினருக்க ு தகவல் கிடைத்தது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்ட காவலர்கள் சங்ககிரிபவானி முதன்மை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பழையபட்டிபுதுரை சேர்ந்த லாரி ஓட்டுநர ் பாபு (31), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த உதவியாளர ் மாரி (27) கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட ரேஷன் அரிசி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியுடன் 70 கிலோ எடையில் 180 மூடை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. கைதான நபர்களிடம் சேலம் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments