Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (13:35 IST)
லஞ்சம் வாங்கிய காவல் துறை உயர் அதிகாரியை மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்தனர ்.

மதுரை மாநகர காவல் சரகத்திற்கு உட்பட்ட தல்லாக்குளம் காவல் சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன ், தனது சகோதரி வீட்டில் வைத்த ு 15,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர ்.

மதுரையில் தல்லாக்குளம் பகுதியில் பழைய வாகனங்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் காதர ். இவரிடமிருந்து ஒருவர் வாகனம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார ். அதற்கான தொகை செலுத்தாமல் காலம் கடத்தி வந்த நிலையில ், அவரிடமிருந்து தான் விற்ற வாகனத்தை பறிமுதல் செய்ய காதர ், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தை அணுகினார ்.

இது தொடர்பாக சட்டம ் - ஒழுங்கு உதவி ஆணையர் விவேகானந்தனை சந்தித்து காதர் புகார் தெரிவித்தபோத ு, அவரின் புகார் மீது நடவடிக்கை மேற்கொண்ட ு, மேற்கண்ட நபரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய விவேகானந்தன ் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார ்.

இதனால் கோபமடைந்த காதர் இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக் கண்காணிப்பாளர் பால சண்முகத்திடம் புகார் செய்துள்ளார ். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட பால சண்முகம ்,

இந்நிலையில் தனது சகோதரி வீட்டில் வைத்து விவேகானந்தன் காதரிடம் இருந்த ு 15,000 ரூபாயை பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான சிறப்புப் படையினர் கைது செய்தனர ்.

இச்சம்பவம் மதுரை மாநகர காவல்துறையினரிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments