Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் அந்நியர்? ஜெவா? சோனியாவா-ராஜா கேள்வி

-எமது திருச்சி செய்தியாளர்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (17:24 IST)
யார் அந்நியர்... ஜெயலலிதாவா? சோனியாவா என்று அமைச்சர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா மாநில அமைப்பாளர் ரஞ்சித் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆர். ராஜா கலந்து கொண்டு பேசினார்.

1942 ல் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம் மிக முக்கியமானது. ஆங்கிலேயர் எதிர்ப்பில் பெரியார் பின் வாங்குகிறார் என்று அப்போது சொன்னார். இங்கிருந்து கொண்டே எங்களை அடக்கி ஆட முயல்பவர்கள் அந்நியரா? எங்கோ இருந்து வந்து எங்களை தொட்டு எங்களோடு வாழும் ஆங்கிலேயர் அந்நியரா? என்று அந்த தலையங்கத்தில் தந்தை பெரியார் கேட்டு இருந்தார்.

இப்போது அந்த வரலாறு திரும்பியிருக்கிறது. தமிழர் எழுச்சி நாள் கொண்டாடி சேது சமுத்திர திட்டத்தை முன் வைத்தவர் அறிஞர் அண்ணா. அவர் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கும் ஜெயலலிதா அந்நியரா? எங்கோ பிறந்து இந்தியாவுக்கு வந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் சோனியா அந்நியரா?

நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை. அது எந்த எல்லைவரை என்றிருக்கிறது. உலகம் தட்டையானது என்று நம்பப்பட்டபோது அது உருண்டையானதுதான் என்று அறிஞர் ஒருவர் அறிவியல் பூர்வமாக அறிவித்தபோது, ஏற்றுக் கொண்டோம். அதே போலத்தான் அறிவியல் வளரும்போது, நம்பிக்கைகள் குறையத்தான் வேண்டும் என்று ராஜா பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments