Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு அடைப்பு : பலத்த ஏற்பாடு

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (14:28 IST)
தமிழ்நாட்டில ் திங்கட்கிழம ை நடைபெறும ் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடைப ெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ க அரச ு எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறுப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம ் காவல்துறையினர் ஈட ுபடுத்தப்படுகிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி, தமிழ்நாட்டில் த ிங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்த ில் தொடரப்பட்ட வழக்கில், முழு அடைப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், பொது மக்களுக்கு எந்த வித இட ைய ூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்து வசதி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சார வினியோகம் போன்றவை இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தது.

அதைத் தொடர்ந்து, முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடைபெற, தமிழக அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. முழு அடைப்பின்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கைய ில், " அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள கடையடைப்பின்போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, பாதிக்கப்படமாட்டாது என்று அரசு உறுதியளிக்கிறது. பொதுமக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லாத் தரப்பினரும் அமைதி காத்திட வேண்டுமென அரசு கேட்டுக்கொள்கிறது. அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத் தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் வினியோகம், மின் வினியோகம், செய்தித்தாள் வினியோகம், மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.

நகரங்களில் பாதுகாப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட வேண்டும். ரயில் நிலையங்கள், பேருந்து பணிமனைகள், முக்கிய சாலைகள், முக்கிய சந்திப்புகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தகுத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பவங்கள் நடக்கும்போது சரியான நேரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், அனைத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். வேலைநிறுத்தம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும ்" என்று எல ்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம ் காவல்துறையினர ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து ரெயில்வே காவல்துற ை சூப்பிரண்டு ராதிகா கூறியதாவத ு, " முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு சென்னை, கோவை, சேலம், ஈரோடு, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக ரெயில்வ ே காவல்துறையினர் குவிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ரெயிலிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், தண்டவாளங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ரெயில் மறியலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்'' என்று கூறினார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments