Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (11:23 IST)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று முதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை முழுகொள்ளளவு கொண்டுள்ளதால் உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் பத்துக்கும் மேற்பட்ட ஆற்றங்கரையோர நகரங்களுக்கு வெள் ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. நேற்று அணைக்க ு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்தது.

அணைக்கு வினாடிக்கு 8500 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் செப்டம்பர ் மாதம் 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்தக்கூடாது என்ற விதியுள்ளது. மூன்று அடி குறைவாக இருக்கவேண்டும். காரணம் தென்மேற்கு பருவமழை திடீரென தீவிரமடைந்து தண்ணீர் வரத்து அதிகாரித்தால் இதை சமாளிக்க மூன்று அடி வேண்டும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 101.98 ஆகவே நேற்று இரவு பவானி ஆற்றில் வினாடிக்கு 5950 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் கலக்கும். மேலும் பவானிசாகர் அணை முழுகொள்ளளவு எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடபோவதால் கரையோர மக்களுக்கு வெள் ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments