Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் :ஆளுநரிடம் பாஜக மனு

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (16:15 IST)
சென்னையில் உள்ள தங்களது தலைமை அலுவலகம் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்காக திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் பாரதிய ஜனதாக் கட்சி மனு அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகக் கிளையின் தலைவர் இள. கணேசன், அக்கட்சியின் தேசச் செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் கொண்ட குழுவினர், பாஜக தலைமையகமான கமலாலயம் மீது நடந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், அதற்கு மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தூண்டுதலே காரணம் என்றும் கூறியுள்ளனர்.

தங்களது தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இள. கணேசன் கூறினார்.

கமலாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் கூறிய இள. கணேசன், கருணாநிதிக்கு எதிராக மதக்கட்டளை பிறப்பித்தவர்களுக்கு திமுக தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள் என்று ஆற்காடு வீராசாமி அறிக்கை வெளியிட்டதே வன்முறையைத் தூண்டியது என்று குற்றம் சாற்றினார்.

தமிழக அமைச்சர் பருதி இளம் வழுதியும், மாநகர மேயர் மா. சுப்ரமணியமும், பாஜக தலைமையகம் மீது நடந்த தாக்குதலை முன்நின்று நடத்தியதாகக் குற்றம்சாற்றிய கணேசன், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் பேச்சும் வன்முறையைத் தூண்டியுள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments