ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ நறுமண செண்ட் தொழ ிற ்சாலை அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். கடந்த பத்த ு வருடங்களாக சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் புன்செய்புளியம்பட்டி பகுதியில் மல்லிகை பூ பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை கண ிசமாக அதிகரித்துள்ளது.
webdunia photo
WD
இப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு இப்பகுதியில் இருந்து சுமார் 15 டன் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் மல்லிகை பூ அனைத்தும் சத்தியமங்கலம் பூ விவசாயிகள் மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் முறையில் விற்பனையாகிறது.
நல்ல சீசன் நேரங்களில் ஒர ு கிலோ மல்லிகை பூ ரூ.1500 வரையிலும் பல நேரங்களில் கிலோ ஒன்று ரூ.3 க்கும் விற்பனையாகிறது. மணிக்கு ஒர ு விலைக்கு விற்பனையாகும் இந்த மல்லிகை பூ ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபிசெட்டிபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
இதுதவிர சத்தியமங்கலத்தில் இருந்து வேன் மூலம் கோயமுத ்த ூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மும்பை, கேரளாக ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இதுதவிர கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் பெங்களுருக்கு சத்தியமங்கலம் மல்லிகை பூக்களே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இங்கு மல்லிகை பூ செண்ட் தொழ ிற ்சாலை அமைத்தால் மல்லிகை பூ விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார். சத்தியமங்கலம் பகுதியில் தற்போது செண்டுமல்லி பூ அதிகமாக விளைகிறது. இதற்கு இங்கு தனியார் செண்ட் தொழில்சாலை ஒன்று செயல்பட்டு வருவதால் செண்டு மல்லி பூ விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கிறது. இதேபோல் மல்லிகை பூவிற்கும் நிரந்தர விலை கிடைக்கவேண்டும் என்றால் இதற்கு தனியாக செண்ட் தொழ ிற ்சாலை அமைப்பதே தீர்வாகும் என்கிறார் மல்லிகை பூ விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லப்பன்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூ செண்ட் தொழ ிற ்சாலை அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவது மட்டுமின்றி ந ூற்றக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது மறுக்கமுடியாது உண்மையாகும்.