Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதாந்தி ‌மீது நடவடி‌க்கை: பிரதமரிடம் தி.மு.க. புகார்!

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (16:28 IST)
ராம்விலாஸ் வேதாந்தியின் சட்ட விரோதமான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் மத அடிப்படை வாதிகளை தூண்டுவதாக உள்ளது. எனவே தாமதப்படுத்தாமல் ‌பிரதம‌ர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ட ி. ஆ‌ர ். பால ு வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.

மத்திய மந்திரியும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனு‌ப்‌பியு‌ள்ள கட ித‌த்‌தி‌ல், விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவரும் முன்னாள் பா ர‌த ிய ஜனதா எம்.பி.யுமான ராம்விலாஸ் வேதாந்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு அயோத்தி சாமியார்கள் சார்பில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று கூறி இருக்கும் செய்தியை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த காட்டு மிராண்ட ி‌‌‌ தனமான மிரட்டல் தமிழ் சமுதாயத்தின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வாழும் கோடான கோடி தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளது எ‌ன்று டீ.ஆ‌ர்.பாலு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

கடந்த காலங்களில் எங்கள் தலைவர் அரசியல் காரணங்களால் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்ட நேரத்தில் அவர் மீது அளவு கடந்த பற்று கொண்டிருந்த மக்கள் தீக்குளிப்பு போன்ற முடிவுகளை எடுத்து தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். அந்த அளவுக்கு தலைவர் மீது பற்றுதல் கொண்டுள்ளனர். இப்போதும் கொந்தளிப்பான, பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது என ம‌த்‌‌‌தி‌ய அமை‌ச்ச‌ர் ‌‌நினைவூ‌‌‌‌ட்டியு‌ள்ளா‌ர்.

எனவே மத்திய அரசும், நீங்களும் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தி.மு.க. பாராளு மன்ற தலைவர் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். ராம்விலாஸ் வேதாந்தியின் சட்ட விரோதமான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் மத அடிப்படை வாதிகளை தூண்டுவதாக உள்ளது. எனவே தாமதப்படுத்தாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் டி.ஆ‌ர்.பாலு வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments