Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜனதா அலுவலகம் முன் கரு‌ப்பு கொடிக‌ட்டி மறியல் : ஆற்காடு வீராசாமி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (17:15 IST)
மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால், இன‌்னு‌ம் ஒரு வாரத்தில் பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன் எ ன அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌‌மி எ‌ச்ச‌ரி‌‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

ராமர் பிரச்சினை பற்றி ஒரே மேடையில் வாதிடத்தயாரா என்று பா.ஜ.க. தலைவர் கேட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. விஸ்வ இந்து பரிட்சத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவரைத் தாக்கி "பட்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில ே, கலைஞரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர் களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தலைவர் கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம். இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் எ‌ன அமை‌ச்ச‌ர் உண‌ர்‌த்‌தியு‌ள்ளா‌ர்.

பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால், தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன் என அமை‌ச்ச‌ர் எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடு வது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம் எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தை பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கின்றது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை என அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழ்நாட்டு மக்களே, தி.மு.கழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாம ா? இன்றே புறப்படுங்கள் எ‌ன்று தொ‌ண்ட‌ர்களு‌க்கு ஆ‌ற்காடு அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments