Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (11:05 IST)
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

நேற்று காலையில் அணைக்கு விநாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் 26,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் நேற்று காலை 119.67 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவில் 120 அடியை எட்டியது.

இந்த ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை நான்கு முறை எட்டியுள்ளது.

இன்று காலை அணையின் நீர்மட்டம் 120.24 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 35,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக 4,733 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 21,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments