Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோட்டில் 7 புதிய துணை மின் நிலையம்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (10:18 IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஏழு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் மூ லன ூர் அருகே வடுகபட்டியில் ரூ. 10 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல்நாட்ட ு விழா ஆட்சியர ் உதயசந்திரன் தலைமையில் நடந்தது.

விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டு ப ேசுகையில், ஈரோடு மாவட்டத்தில விவசாயிகள், விசைத்தறிகள், ந ூல் மில்கள், கோழிப்பண்ணைகள் அதிகமாக இருப்பதால் மின் இழப்பு ஏற்பட்டு குறைந்த மின்னழுத்தத்தால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்க 100 டிரான்ஸ்ஃபார்மர்கள் தேவைப்படுகிறது என்று வடுகபட்டி வரும் வழியில் அமைச்சர்கள் என்.கே.கே.பி.ராஜாவும், முத் தத ூர் சாமிநாதனும் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

நான் 150 டிரான்ஸ்ஃபார்மர்கள் வழங்க உத்தரவிடுகிறேன ். எதிர்காலத்தில் 10 ஆயிரம் டிரான்ஸ்ஃபார்மர்கள் வாங்கப்படும்.

வடுகபட்டி துணை மின் நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி திறக்கப்படும். தலைமை பொறியாளர் ஆறு மாதத்தில் முடித்து தருவதாக உறுதி வழங்கியுள்ளார். தாராபுரம் செயற்பொறியாளர் பணி ஓய்வு பெற்றதாக கூறுகின்றனர். அவருடைய திறமையான பணியை பாராட்டி இந்த துணை மின் நிலையம் பணி முடியும் வரை கால நீட்டிப்பு வழங்க ஆவன செய்கிறேன்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சியில் ஆட்சியர் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். தொப்பம்பாளையம், கெட்டி சேவியூர், காடையூர், ஊராட்சிகோட்டை, பழையகோட்டை, குன்னத ்தூர ், ஈங்கூர் ஆகிய எழு பகுதிகளில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

காடையூர், ஊராட்சி கோட்டை பகுதிகளில் அறநிலையத் துறையினர் இடம் வழங்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் பேசப்படும். ஏழு துணை மின் நிலையங்களும் அடுத்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும ் என்று ஆற்காடு வீராசாமி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments