Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் புகாருக்கு கருணாநிதி பதில்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (16:03 IST)
பொறுமையாக இருந்து தான் குடிமனை பட்டா வழங்குவதில் வெற்றி காண முடிவும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொல்கொத்தா நகரில் கைரிக்ஷா ஒழிப்புச் சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வந்த போதிலும், அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புக்கும், மறுவாழ்வுக்கும் வகை செய்யப்படாததால், கை ரிக்ஷா இழுப்போர் சங்கத்தின் சார்பில் நீதி மன்றம் சென்று தடையாணை பெற்றுவிட்டனர். இப்போதும் அங்கே கைரிக்ஷா இருந்து கொண்டு தான் உள்ளது.

மேற்கு வங்கத்தைத் தொழில் மயமாக்குவதற்கு இடதுசாரி முன்னணி மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடை போடும் வகையில் நந்திகிராமில் வன்செயலுக்கு எதிர்க்கட்சிகள் தூபம் போடுகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பெரும் தலைவர் ஜோதிபாசு குற்றம் சாட்டினார்.

எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய பாசு, எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் பேராதரவு இல்லை. எனவே நந்தி கிராமத்தில் வன்முறையைத் தூண்டி விட்டு தொழில் மய நடைமுறைகளைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றார்.

உடனடியாகக் குறைந்தது 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். பட்டா வழங்கப்படும் வரை போராட்டம் ஓயாது. இந்தப் போராட்டத்தின் எழுச்சியை கண்டாவது மாநில அரசு துரிதமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு பட்டா கிடைப்பதற்காக உயிரை விடவும் தயாராக உள்ளேன் என என்.வரதராஜன் குறிப்பிட்டார்.

இன்னமும் "கைரிக்ஷா வை அனுமதித்துக் கொண்டிருக்கின்ற மாநிலமாகவும், குடிமனைப்பட்டா அனைவருக்கும் வழங்காத நிலையில் உள்ள மாநிலமாகவும் இருக்கின்ற கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கின்ற மேற்கு வங்க, கேரள மாநிலங்களுக்கு இந்த நிலைகள் பொருந்தாதா?

பொருந்தும் என்றாலும், இன்னும் சில காலம் பொறுமையுடன் இருந்து தான் தமிழ்நாடானாலும், மேற்கு வங்க, கேரள மாநிலங்களானாலும ்` முழு வெற்றி காண முடியும். இவ்வாறு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments