Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : செங்கோடன் வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2007 (18:42 IST)
மத்திய அரசு விரைவில் டீசல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தவேண்டும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.செங்கோடன் வலிய ுற ுத்தியுள்ளார்.

சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 32 வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டு பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.செங்கோடன், தமிழ்நாட்டில் லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், லாரி உரிமையாளர் கள் தமிழக அரசிடம் எவ்வித கோரிக்கையும் இதுவரை வைத்ததில்லை என்றும், ஆனால் தற்போது வைக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

விரைவில் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்த ின ார் . டீசல் விலை உயர்ந்தால் 80 சதவீதம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments