Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடம்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2007 (10:47 IST)
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கபினி, கிருஷ்ணரா ஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியை தாண்டியதால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நேற்று மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரம் க ன அடி தண்ணீரும், பவான ி சாகர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடிதண்ணீரும் திறந்து விடப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரியாற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் இருக்கும் நெரிஞ்சிபேட்டை, சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, படவல் வாய்க்கால், குருப்பநாயக்கன்பாளையம், பவானி, அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கொடுமுடி மற்றும் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும ் என மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் நேற்றும் எச்சரித்தது.

குடியிருப்புகளை விட்டு வெளியேறும் மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆற்றில் தண்ணீர் வரத்தையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?