Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி : பிரதமர் தலையிட வேண்டும் - தமிழக முதல்வர்!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (17:25 IST)
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்துமாறு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், இப்பிரச்சனையில் தலையிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டுள்ளார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி!

கர்நாடகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பிவரும் நிலையில், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனைக் கண்டித்து மைசூரில் நடந்த மறியலிற்குப் பிறகு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்துமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாக செய்திகள் வந்துள்ளன.

இதனை மேற்கோள்காட்டி முரசொலியில் எழுதியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடக துணை முதலமைச்சர் எடியூரப்பா அணைகளை மூடுமாறு உத்தரவிட்டதாக வரும் செய்திகள் உண்மையென்றால், சட்டத்தின் ஆட்சிக்கும், கூட்டாட்சிக்கும் அவர் எந்த மதிப்பையும் தரவில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சேலம் ரயில் கோட்டம் உருவாக்கப்படுவது குறித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கூறியிருந்ததை மறுத்துள்ள கருணாநிதி, சேலம் கோட்டம் உருவாக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் எல்லைகளும் வரையறை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணை அமைச்சர் ஆர். வேலு கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

சேலம் கோட்டம் உருவாக்குவது குறித்து கேரள அரசுடன் பேசத் தேவையில்லை என்றும், சேலம் கோட்டம் ஆகஸ்ட் மாதத்தில் துவக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments