Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராட் ஹாக் மீது குற்றச்சாற்று பதிவு - ஐசிசி!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:46 IST)
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித் தலைவர் அனில் கும்ளே, மகேந்திர சிங் தோனி ஆகியோரை திட்டியதாக ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூறியுள்ளது!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றம் சாற்றப்பட்ட அதே பிரிவின் கீழ் (ஐசிசி நடத்தை விதி எண் 3.3 கீழ்) பிராட் ஹாக் மீதும் குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை செய்திக் குறிப்பு, இக்குற்றச்சாற்றின் மீது ஆட்ட நடுவர் மைக் பிராக்டர் வரும் 14 ஆம் தேதி விசாரணை நடத்துவார் என்று கூறியுள்ளது.

ஆட்டக்களத்தில் கிரிக்கெட் வீரர்களையோ அல்லது அணி நிர்வாகிகளையோ புண்படுத்தும் விதமாகப் பேசுவது, சைகை செய்வது, மிரட்டுவது, அச்சுறுத்துவது ஆகியவற்றின் ஒழுங்கு விதிமுறைகளின் கீழ் ஹாக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாற்றுகள் நிரூபணமானால் அவர் 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது 4 முதல் 8 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாடுவதற்கு தடை செய்யப்படுவார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments