Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டியாலா மருத்துவமனையில் தீ: 5 குழந்தைகள் பலி

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (12:28 IST)
பாஞ்சாப்பின் பாட்டியாலா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்து சில நாட்களே ஆன 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் குர்மித் சிங் கூறுகையில், ரஜிந்த்ரா மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைகளை பாதுகாக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் இன்குபேட்டர் ( incubato r) என்ற செயற்கை பாதுகாப்பு கருவியில் வைக்கப்பட்டிருந்த 5 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறினார்.

மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குர்மித் சிங் கூறினார்.

இதற்கிடையில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 குழந்தைகள் எந்தவிதக் காயமும் இன்றி மீட்கப்பட்டதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments