Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌க்கு வாகனங்களை க‌ண்கா‌ணி‌க்க ம‌த்‌திய அரசு உத‌வி : டி.ஆர். பாலு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (14:54 IST)
வாகனங்களில் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்ற ு‌ ம ் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சரக்கு கிடங்குகள், எடை பார்க்கும் பாலங்கள், கிரேன்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்யவுள்ளதாக மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு தெரிவித்தார்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் தனத ு தலைமை‌யி‌ல ் நட‌ந் த தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சிலின் 11-வது கூட் ட‌ த்‌தி‌ல ் அமை‌ச்ச‌ர ் இ‌வ்வாற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிற முக்கிய தீர்மானங்களாவன :

நடப்பாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாடெங்கிலும், அளவுக்கு அதிகமான சரக்கு ஏற்றுவது தொடர்பான முனைப்பான இயக்கம் நடத்தப்படும்.

வேகத்தை கட்டுப்படுத்தும் கருவிகளை போக்குவரத்து வாகனங்களில் பொருத்துவது தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுகளின் வசம் தொடர்ந்து இருக்கும்.

ஒவ்வொரு மாநிலத்திலும், படிப்படியாக, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு நிதியதவி செய்யும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பிற அமைப்புகள் தெரிவித்துள்ள பரிந்துரைகளை அமைச்சகம் குறித்த காலத்திற்குள் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் சட்டத்திலும், நெறிமுறைகளிலும் திருத்தங்கள் செய்யும்.

கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத்தை சேர்ப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி அளிக்கப்படும் சேவைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு, ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments