Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலேகான் உள்நாட்டு விவகாரம்: இந்தியா

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (16:58 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு முழுவதும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் பாகிஸ்தான் செய்வதற்கு ஏதுமில்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலேகான் வழக்கை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும், இப்பிரச்சினையில் கருத்து கூறுவது சரியானதாகாது என்றும் கூறினார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரியை சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாகிஸ்தானிடம் ஒப்படைக்குமாறு அந்நாடு கோரிக்கை விடும் என தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஆண்டனி, மாலேகான் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் எப்படி அதில் தலையிட முடியும்? என்றும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் கூறினார்.

மாலேகான் விசாரணை முடிந்து இறுதி முடிவு வரும்வரை காத்திருப்போம் என்றும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நோக்கி ராணுவத்தினர் குவிக்கப்படுவது பற்றிக் கேட்டபோது, இந்தியப் படையினரைப் பொருத்தவரை எந்தப் பகுதியில் இருந்தும், எந்தவொரு சவாலையும் அல்லது அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்குத் தயாராக உள்ளனர் என ஏ.கே. ஆண்டனி பதிலளித்தார்.

என்றாலும் மத்திய அரசு ராஜ்ய ரீதியிலான வழிமுறைகளிலேயே அதிக கவனம் காட்டி வருவதாகக் கூறிய பாதுகாப்பு அமைச்சர், கடந்த நவம்பர் 26 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஆயுதப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

அதே நேரத்தில் எல்லைப்பகுதியில் படைகள் குவிக்கப்படுவதால், பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகளை அனுப்புவது குறித்து அரசு பரிசீலனை செய்கிறதா? என்று கேட்டபோது, ஆப்கானிஸ்தானின் மறுநிர்மாணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு மட்டுமே இந்தியா முயற்சி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments