Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டும் : பிடிபி

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (14:00 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்பது குறித்து, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி - பிடிபி கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களையும், பிடிபி 21 தொகுதிகளையும் பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்று, தங்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோருவதற்காக தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல் அமைச்சருக்கான பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, புதுடெல்லி விரைந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி, எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கப் போகிறோம் என்பது காங்கிரஸ் கையில்தான் உள்ளது என்றும், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றியைக் கருத்தில் கொண்டு அக்கட்சி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஏற்கனவே பிடிபியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தலா இரண்டரை ஆண்டுகால ஆட்சி என்ற சுழற்சி முறையில் ஆட்சியில் இருந்தன. அமர்நாத் யாத்ரிகர்களுக்கு நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் - பிடிபி இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து குலாம்நபி ஆசாத் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை பிடிபி விலக்கிக் கொண்டது. இதனால் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடந்து பிடிபி நீடித்து வரும் நிலையில், ஏன் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணியை அமைக்கக்கூடாது என்றும் மெஹ்பூபா கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments