Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைக் காய்ச்சலை ஒழிக்க மாநிலங்களுக்கு உதவி : அன்புமணி

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (17:22 IST)
பறவைக் காய்ச்சலை ஒழிக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி கூற ியு‌ள்ளா‌ர்.

நாட்டில் பறவைக் காய்ச்சலின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செ‌ய்த அவ‌ர் இது தொடர்பாக பல்வேறு சுகாதார அமைப்புகளின் தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அவர் க ூறுகை‌யி‌ல், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார அமைப்புகளை அதிகபட்ச தயார்நிலையில் வைத்திருக்குமாறு மாநில முத‌ல்வ‌ர்களு‌க்கு‌ம ், சுகாதார அமைச்சர்களுக்க ு‌ம ் கடிதம் அனுப்பப்பட உள்ளது.

இந்த நோய ை‌ப் பொறுத்தவரை, அதைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நோய் தொடர்பாக பாதுகாப்பான நடவடிக்கைகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். நோய் தாக்கிய கோழிகளை அழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று அன்புமணி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments