Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வருவாய் 14.49 ‌விழு‌க்காடு அதிகரிப்பு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (17:12 IST)
நட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரைய ிலான கால‌த்‌தி‌ல ் ரயில்வேத் துறையின் வருவாய் ரூ. 50,931.98 கோட ிய ை எட்டியுள்ளது. கட‌ந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.44,484.60 கோடியைவிட இது 14.49 ‌ விழு‌க்காடு கூடுதலாகும்.

இதே காலகட்டத்தில ், சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.34,393.78 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.29,733.82 கோடி மட்டுமே. சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15.67 ‌ விழு‌க்காடு அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில ் ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.14,440.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.12,869.41 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டைவிட 12.21 ‌ விழு‌க்காடு அதிகமாகும்.

ஏ‌‌‌ப்ர‌ல் முத‌ல் நவ‌ம்ப‌ர் 30ஆ‌ம் தே‌தி வரை‌யிலான கால‌த்‌தி‌ல், 4,717.37 மில்லியன் பே‌ர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிட ுகை‌யி‌ல் பயணிகளின் எண்ணிக்கை 6.47 ‌ விழு‌க்காடு அதிகரித்துள்ளது. இ‌த்தகவலை ம‌த்‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments