திரிபுராவில் திரிபுரா புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர்.
மேற்கு திரிபுராவில் உள்ள ஹிரங்கல்பாரா வனப்பகுதியில் பதுங்கியிருந்த அனைத்து திரிபுரா புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துச் சரணடைந்தனர்.
பிரிய ரஞ்சன் டெப்பர்மா(27), மனோஜ் டெப்பர்மா(28), ரத்தன் சதன் ஜமாட்டியா(28), ஆனந்தா டெப்பர்மா(27), உஷா ரஞ்சன் டெப்பர்மா(19) ஆகியோர்தான் சரணடைந்த தீவிரவாதிகள் ஆவர். கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர்.