Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌யி‌ர் த‌ப்‌பிய பெ‌ண் ஊ‌ழிய‌‌ரி‌ன் சோக‌ம்

Webdunia
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (14:59 IST)
தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து உயிருடன் தப்பிய 23 வயதான ஃப்ளோரன்ஸ் என்ற பெண் தனது தந்தையை இழந்த சோகத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை.

தானேயில் வசிக்கும் ஃப்ளோரன்ஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டலில் வரவேற்பறையில் பணியாற்றி வந்தார். அவரது 50 வயதான தந்தை மார்டிஸ் அதே ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.

கடந்த புதன்கிழமை இரவு தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளிடம் தாஜ் ஊழியர்கள் மற்றும் விடுதியில் தங்கியவர்களுடன் தந்தை, மகள் இருவருமே பிணையக் கைதிகளாக பிடிபட்டனர். தந்தை தரை தலத்திலும், மகள் இரண்டாவது மாடியிலும் பயங்வராதிகளின் பிடியில் இருந்துள்ளனர்.

நவம்பர் 26ம் தேதி ஃப்ளோரன்ஸ் தனது சகோதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேப்போல மார்டிசும் வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு தனது மனைவியிடம் பேசியுள்ளார்.

பின்னர் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு முயற்சியில் ஃப்ளோரன்ஸ் மற்றும் சில ஊழியர்களும் ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டனர்.

ஃப்ளோரன்ஸ் தனது வீட்டிற்குச் சென்றபோதுதான், தனது தந்தை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்தார்.

மார்டிஸ் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் தனது மகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகளுக்கு ஆறுதலும், தைரியமும் அளித்துள்ளார்.

எனது தந்தை என்னிடம் தொலைபேசியில் பேசிய போது, எனக்கு மிகவும் பசிக்கிறது என்று கூறினேன். அவர் எனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வருவதாகக் கூறினார். ஒருவேளை எனக்கு உணவு கொண்டு வர முயற்சி செய்தபோது தான் அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறிவிட்டு கதறி அழுதார்.

இதில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டி இருக்கிறது, மார்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றுதான் அவருடைய திருமண நாளாகும்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?