Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசம், மிசோரமி‌ல் தேர்தல் தேதி மாற்றம்!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (22:46 IST)
ம‌த்‌திய ‌பிரதேச‌ம், ‌மிசோரமி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை‌க்கான தே‌‌ர்‌த‌ல் தே‌தியை தலைமை தே‌‌ர்த‌ல் ஆணைய‌ம் மா‌ற்‌றி அமை‌த்து‌ள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் காஷ்மீர் மாநில சட் ட‌ப்பேரவை‌க்கு‌ம் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணைய‌ம் அறிவித்து இருந்தது.

முதலில் வெளியான அறிவிப்பின்படி மத்திய பிரதேசத்தில் நவம்பர் 25 ஆ‌ம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 29 ஆ‌ம் தேதியும் தேர்தல் நடைபெற இருந்தது.

தற்போது மத்திய பிரதேச தேர்தல் தேதியை நவம்பர் 27 ஆ‌ம் தேதிக்கும், மிசோரத்தில் டிசம்பர் 2 ஆ‌ம் தேதிக்கும் மாற்றி தேர்தல் ஆணைய‌ம் அறிவித்துள்ளது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் நவம்பர் 20 ஆ‌ம் தேதி தேர்தல் முடிவடைந்தபின், அங்கிருந்து பாதுகாப்பு படையினரை மத்திய பிரதேசத்துக்கு அனுப்புவதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் நாள் சனிக்கிழமை ஆகும். அந்த மாநிலத்தில் ஒரு பிரிவினருக்கு சனிக்கிழமை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்காது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணைய‌ம ், மிசோரத்தில் தேதி மாற்றத்தை அறிவித்து உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments