Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்ப்யூட்டர், வயர்லெஸ் இணைப்புடன் 18,000 சேவை மையங்கள் அமைப்பு!

Webdunia
புதன், 8 அக்டோபர் 2008 (15:12 IST)
நமத ு நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள ம‌க்களு‌க்க ு எ‌ல்லா‌த ் தகவ‌ல்களு‌ம ் செ‌ன்றடையு‌ம ் வகை‌யி‌ல ் க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர ், வய‌ர்லெ‌ஸ ் இணை‌ப்புட‌ன ் கூடி ய 18,000 பொது‌ச ் சேவ ை மைய‌ங்க‌ள ை ம‌த்‌தி ய அரச ு அமை‌‌த்து‌‌ள்ளத ு.

மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் நலத்திட்ட உதவிகள ், இது குறித்த தகவல்கள் கிராமப்புற மக்களை உடனுக்குடன் சென்றடையும் நோக்கில் நாடு முழுவதும் ஒரு லட்சம் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 6 லட்சம் கிராமங்களை உள்ளடக்கி இந்த மையங்கள் அமைக்கப்படும்.

கம்ப்யூட்டர், வயர்லெஸ் இணைப்பு, பிர ி‌ ண்டர், ஸ்கேனர், யு.பி.எஸ், டெலிமெடிசின் வசதி, புரொஜக்டர் ஆகியவை இந்த மையங்களில் இருக்கும். மிகவும் பின்தங்கிய, கிராமப் பகுதிகளுக்கும் அனைத்து தகவல்கள ், சேவைகள் இந்த மையங்கள் மூலம் கிடைக்கும்.

தற்போது நாடு முழுவதும் 18 ஆயிரம் சி.எஸ்.சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பொது சேவை மையங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.

அரசு-தனியார் இணைந்து இதற்கென பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காக நான்காண்டில் ரூ.5,742 கோடி ஒதுக்கப்படும். மத்திய அரசு ரூ.856 கோடி, மாநில அரசுகள் ரூ.793 கோடி வழங்கும். மீதி தொகை தனியார் நிறுவனங்கள் மூலம் பெறப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments