Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கூரில் இருந்து விலகிக்கொள்வதாக டாடா நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (20:00 IST)
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்து தங்களது ‘நான ோ’ குறைந்த விலை கார் திட்டத்தை விலக்கிக் கொள்வதாக டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.

கொல்கட்டாவில் இன்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் டாடா, “சிங்கூரில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்ல ை” என்று கூறினார்.

சிங்கூரில் இருந்து வெளியேறினாலும், திட்டமிட்ட காலத்தில் தங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் நானோ கார் நிச்சயம் வெளிவரும் என்று ரத்தன் டாடா உறுதியளித்துள்ளார்.

தங்களது திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டமே இம்முடிவிற்கு காரணம் என்று கூறிய ரத்தன் டாடா, தங்களது நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், உபரிகள் வழங்குவோர் ஆகியோரின் நலன், பாதுகாப்புக் கருதி சிங்கூரில் இருந்து வெளியேறுவதாக கூறினார்.

நானோ கார் திட்டத்திற்கான தொழிற்சாலையை அமைக்க இரண்டு, மூன்று மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், எங்கு அது நிறுவப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

Show comments