மத்தியப்பிரதேசத்தில் வெளி வந்து கொண்டிருக்கும் நயி துனியா (இந்தி) நாளிதழ் தலைநகர் புதுடெல்லியில் அடியெடுத்து வைத்துள்ளது.
webdunia photo
WD
காந்தி மகான் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி புதுடெல்லியில் தனது முதல் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது நயி துனியா.
இதன் மூலம் வட இந்திய மாநிலங்களை நோக்கியப் பயணத்தை நயி துனியா துவக்கியுள்ளது என்றேக் கூறலாம்.
நயி துனியாவின் முதல் பிரதியை இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பெற்றுக் கொண்டார். நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற துவக்க விழாவில், நயி துனியாவின் தலைவர் அபய் சஜ்லானி, தலைமை செயல் அதிகாரி வினய் சஜ்லானி நயி துனியா நாளிதழை வெளியிட குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதீபா பாட்டில் பெற்றுக் கொண்டார்.
webdunia photo
WD
இந்த நிகழ்ச்சியில் நயி துனியாவின் நிர்வாகக் குழுவினரும் மற்றும் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நயி துனியா நாளிதழைப் பெற்றுக் கொண்டு பிரதீபா பாட்டில் பேசுகையில், உலகத்தில் ஏற்படும் பல நல்ல புதிய முன்னேற்றங்களை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்க நயி துனியா போன்ற நாளிதழ் அவசியமாகிறது. அந்த கடமையை நயி துனியாக சிறப்பாக செய்ய வேண்டும். நயி துனியா (புதிய உலகம் என்பது பொருள்) எப்போதும் புதியதாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
webdunia photo
WD
மேலும், நயி துனியா குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.