Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையைத் தூண்டுவோர் மீது கடு‌ம் நடவடிக்கை: ம‌த்‌திய அரசு!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (11:43 IST)
மும்பையில் வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மரா‌ட்டிய அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில், பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மரா‌ட்டி ய அரசை‌க ் கேட்டுக் க ொ‌ ண்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல ், மும்பை நகரில் அமைதியையும், சமூக ஒற்றுமையையும் பாதுகாக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " இந்தியாவின் நித ி, தொழில் துறைகளில் மும்பை தலைநகரமாக விளங்குகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த இந்திய குடிமக்களும் மரா‌ட்டி ய மாநிலத்தை சேர்ந்தவர்களும், மும்பை நகரை உருவாக்கியிருக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவின் வலிமையையும் அதன் புகழையும் பறைசாற்றும் வகையில் மும்பை நகரம் உள்ளது.

மரா‌ட்டி ய மாநில மக்களும் நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்நகரில் வாழ்ந்து வருகின்றனர். வளமையையும் சோதனை காலத்தையும் அவர்கள் சேர்ந்தே அனுபவித்து வந்துள்ளனர். நாட்டு ஒற்றுமையின் சின்னமாக மும்பை நகரம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எவ்வகையிலும் இது பாதிக்கப்படக் கூடாது.

எந்தவொரு நபரோ அல்லது பிரிவைச் சேர்ந்த மக்களோ மிரட்டப்படுவது, அவர்களது சொத்துக்கள் இனம் காணப்பட்டு சேதப்படுத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்பதை உறுதி செய்யுமாறு மரா‌ட்டி ய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் தீய சக்திகள் மீது காலதாமதமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கும், அதை கோருவோருக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் மரா‌ட்டி ய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அமைத ி, சமூக ஒற்றுமையை குலைப்பதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். மும்பை நகரம் வரலாறு தொட்டே, தொலைத் தூரத்தில் இருந்து மக்களை கவர்ந்து வந்துள்ளது. மும்பை நகர மக்கள் பரந்த மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள். நகரின் இந்த தன்மை எந்த வகையிலும் பாதிப்படைவதற்கு அனுமதி அளிக்கக்கூடாத ு" இ‌வ்வாற ு ‌‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments