Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இ‌ன்று நில நடுக்கம்!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (12:03 IST)
டெல்லியில ் இன்று அதிகாலை 4.42 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

டெல்லியிலும் அதன் அருகேயுள்ள உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் இ‌ன்று அதிகாலை 4.42 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரி‌‌‌க்ட‌ர் அளவு கோ‌ளில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் சில நொடிகள் நீடித்தது.

இதன் மையப் புள்ளி டெல்லி, ஹரியானா எல்லையில் வடக்கே 28.6 டிகிரியிலும், கிழக்கே 77.9 டிகிரியில் மையம் கொண்டு இருந்தது.

இந்த நில நடு‌க்கத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் தங்கள் ‌வீடு ஆட்டம் காண்பதை உணர்ந்து பீதி அடைந்தனர். கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியில் வந்து குவிந்தனர்.

டெல்லியிலும், அதன் அருகேயுள்ள நோடியா ( உ.ப ி ) பரிதாபாத், குர்கான் (ஹரியான ா) ஆகிய பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டதாக இது வரை தகவல் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments