Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்தம் : ‌ அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை‌க்கு இடதுசா‌ரிக‌ள் அனும‌தி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:14 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் ம‌த்‌திய அரசு பே‌ச்சு நட‌த்‌தலா‌ம ், ஆனா‌ல் அ‌ந்த‌ப் பே‌ச்‌சி‌ன் முடிவுகளை ‌நிராக‌ரி‌க்கு‌ம் உ‌ரிமையை‌ த‌ங்களு‌க்கு‌க் க‌ண்டி‌ப்பாக வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இடதுசா‌ரிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர் எ‌ன்று தகவல‌றி‌ந்த வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்றன.

இ‌ந்‌திய-அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ.மு.கூட்டணி - இடதுசா‌ரிக‌ள் உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வி‌ன் 6-வது கூ‌ட்ட‌ம் வரு‌கிற 16-ஆ‌ம் தே‌தி நட‌க்க இருந்தது. ஆனால், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதால் அக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இ‌ன்று காலை உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வி‌ன் தலைவரு‌ம், ம‌த்‌திய அயலுறவு‌ அமை‌ச்சருமான ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள் ‌பிரகா‌ஷ் கார‌த ், ‌ சீதாரா‌ம் யெ‌ச்சூ‌ரி ஆ‌கியோரை‌ச் ச‌ந்‌தி‌த்த ு, 16 - ஆ‌ம் தே‌தி மாலை 4 ம‌ணி‌க்கு கூ‌ட்ட‌த்தை வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்ற முடிவை‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று தகவல‌றி‌ந்த வ‌ட்டார‌ங்க‌ள் கூ‌றியு‌ள்ளன.

அ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் ம‌த்‌திய அரசு பே‌ச்சு நட‌த்தவத‌ற்கு இடதுசா‌ரிக‌ள் த‌ங்க‌ளி‌ன் அனும‌தியை‌‌த் தெ‌ரி‌வி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. அதே நேர‌த்‌தி‌ல் பே‌ச்சு ‌விவர‌ங்களை‌ச் ச‌ரிபா‌ர்‌த்து ‌திரு‌த்துத‌ல ், பே‌ச்‌சி‌ன் முடிவுகளை ‌நிராக‌ரி‌த்த‌ல் ஆ‌கிய உ‌ரிமைகளை‌த் த‌ங்களு‌க்கு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கைகளை இடதுசா‌ரிக‌ள் வை‌க்கவு‌ள்ளன‌ர்.

இடதுசா‌ரிக‌ள் ஆளு‌ம் மேற்குவ‌ங்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ந‌ந்‌தி‌கிரா‌மி‌‌ல் எழு‌ந்து‌ள்ள ‌சி‌க்கலா‌ல் த‌ங்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவை‌ச் சமா‌ளி‌க்கவ ே, ம‌த்‌திய அரசுட‌ன் இடதுசா‌ரிக‌ள் ஒ‌த்து‌ப் போ‌கி‌ன்றன‌ர் எ‌ன்று ‌விம‌ர்சன‌ங்களை எழு‌ப்‌பியு‌ள்ளன.

ஆனா‌ல ், அதை இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌‌ள் மறு‌த்து‌ள்ளதுட‌ன ், வ‌ன்மையாக‌க் க‌ண்டி‌த்து‌ள்ளன‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் ஐ.மு. - இடதுசா‌ரிக‌ள் உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வி‌ன் அடு‌த்த கூ‌ட்ட‌த்‌தி‌ன்போது சுமூகமான முடிவு ஏ‌ற்படுவத‌ற்கு வா‌ய்‌ப்பு‌ள்ளது எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் நே‌ற்று கரு‌த்து தெ‌ரி‌வி‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஏ.‌பி.பரத‌ன் உ‌ள்‌ளி‌ட்ட ம‌ற்ற இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிக‌ளி‌ன் தலைவ‌ர்களு‌ம் இதேபோ‌ன்ற கரு‌த்தை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.





எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments