Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஆதாரங்களுக்கு 3 நாளில் பதில்: சர்தாரி

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (16:40 IST)
மும்பை மீதான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்புள்ளது என்பது தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களுக்கு, இன்னும் 2 அல்லது 3 நாளுக்குள் பதில் அளிக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான தூதர்களுக்கு இஸ்லாமாபாத்தில் நேற்றிரவு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் சர்தாரி இதனைத் தெரிவித்ததாக அந்நாட்டின் டான் நியூஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகியோரும் அந்த விருந்தில் பங்கேற்றதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

இந்தியா வழங்கிய ஆதாரங்களின் மீது பாகிஸ்தான் தீவிரமாக புலனாய்வு மேற்கொண்டுள்ளதாகவும், தெற்காசிய பகுதியில் அமைதி நிலவ, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நீங்கள் (தூதர்கள்) உதவ வேண்டும் என சர்தாரி அப்போது கேட்டுக் கொண்டார்.

இந்தியாவிடம் இருந்து பெற்ற ஆதாரங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 10 நாட்களில் பாகிஸ்தான் அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த 10 நாள் கெடு நேற்றுடன் நிறைவடைந்தாலும், ஜனவரி 29ஆம் தேதி வரை கெடுவை நீட்டிப்பதாக அமைச்சர் மாலிக் ஊடகங்களிடம் தெரிவித்திருந்து நினைவில் கொள்ளத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments